your Adsense code

Friday, August 2, 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம்

இந்த பதிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பார்ப்போம்.பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.


 பாமகவின் கொள்கைகள் என்ன?

கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள்,
சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள்,
பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில,
டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள்
என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.

பாமக ஒரு வன்னியர் கட்சியா? - நிச்சயமாக இல்லை

பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை,
அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.




பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும்,
மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும்,
சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் ?

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள்?
 திமுகவும், காங்கிரசும் தான்.
வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக 
கிட்டத்தட்டமொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது
திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம்

அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது.திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.





3 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. முயச்சிக்கு வாழ்த்துக்கள் கோபி

    ReplyDelete